2016 டிசம்பர் 02ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-12-02 |
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை இராணுவத்தின் செயல்திறன் அறிக்கை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ ஏ. டி. பிரேமதாச
(ii) கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே
(iii) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே
(iv) கௌரவ வாசுதேவ நாணாயக்கார - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
ரஜரட்டவிலுள்ள “மஹகன்ன” இற்கு மஹாவலி நீரினை சரியான நேரத்தில் வழங்காமை தொடர்பானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட பதினெட்டாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள கோகிலாய் களப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தல் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1854 மணியளவில் பாராளுமன்றமானது 2016 டிசம்பர் 03ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






