இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 டிசம்பர் 01ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-12-01

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர     - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ எஸ்.எம். மரிக்கார்                  - இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன

திரு. குமார் குணரத்னம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகின்றபோது இலங்கைக்கான குடியுரிமை வழங்கல் தொடர்பானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2017) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட பதினேழாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கியுபா குடியரசின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த கௌரவ பிடல் கெஸ்ட்ரோ அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2016 டிசம்பர் 02ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2017]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom