2016 நவம்பர் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-11-25 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் பின்லாந்து குடியரசு அரசாங்கத்திற்குமிடையில் வருமானத்தின் மீது இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வரி செலுத்தாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமாக 2016 ஒக்தோபர் மாதம் 06 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
குழுக்களின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
“வாடகைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்” தொடர்பாக சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை கௌரவ (திருமதி) சுமேதா ஜீ. ஜயசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ அஜித் பி. பெரேரா - நான்கு மனுக்கள்
(ii) கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன
(iii) கௌரவ புத்திக பத்திறண - ஐந்து மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
ஊவா மாகாண சபை முதலமைச்சரின் செயற்பாடு தொடர்பானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள தம்பரெல்ல மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவில் காணப்படும் ஆசிரியர் பிரச்சினைகள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1857 மணியளவில் பாராளுமன்றமானது 2016 நவம்பர் 26ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






