2016 நவம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-11-24 |
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்ட செயலகத்தின் செயலாற்றுகை மற்றும் கணக்குகள் அறிக்கை
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்தின் ஆண்டறிக்கை
குழுக்களின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) “இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்”, “2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை” மற்றும் “2014 ஆம் ஆண்டுக்கான அணுசக்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை” ஆகியன தொடர்பாக வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சந்திம கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) “2015 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை” சம்பந்தமான தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மலித் ஜயதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 47 (5) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 47 (5) இன் கீழ், “ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்)” மற்றும் “மொனராகலை மாவட்ட கான்த்தா மஹா சங்கமய (கூட்டிணைத்தல்)” ஆகிய சட்டமூலங்கள் பற்றிய அறிக்கைகள் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் மூன்று பொது மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
சுண்ணாம்பு கற்கள் அகழ்தல்
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டினை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட பதினொராம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வடக்கு கிழக்கிலுள்ள காணிகளை வீடமைப்பு மற்றும் நெற் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2016 நவம்பர் 25ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






