2016 நவம்பர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-11-22 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─
• 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் V ஆம் பகுதி;
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் I ஆம் பகுதி;
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் IV, V ஆம் பகுதிகளையும் இரண்டாவது தொகுதியின் XVII ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் V ஆம் பகுதி; மற்றும்
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் I ஆம் II ஆம் பகுதிகளையும்
சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி செயலகம்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
2017 வரவு செலவுத் திட்டத்தின் அரசாங்க நிதி, அரசிறை மற்றும் பொருளாதார ஊகங்கள் பற்றிய மதிப்பீடு தொடர்பாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ ரவீந்திர சமரவீர
(ii) கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
வவுனியா மற்றும் செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுகளில் இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்துவதற்கான வசதிகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
ஜெரூசலத்திலுள்ள அல்-ஹரம் சரீப் மற்றும் சுற்றுள்ள பிரதேசங்கள் மீது இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் சேதம் விளைவிக்கும் செயற்பாடுகளை கண்டிக்கும் நோக்கில் பாலஸ்தீனத்தினால் யுனெஸ்கோவில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின்போது இலங்கைத் தூதுக்குழு வாக்கெடுப்பிலிருந்து தவிர்ந்து கொண்டமை தொடர்பாக கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் எழுப்பிய வினாவிற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பிரேரிக்கப்பட்டுள்ள சட்டமான ’கணக்காய்வு ஆணைக்குழு’ இனை பாராளுமன்றத்திற்கு விரைவாக சமர்ப்பித்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ வாசுதேவ நாணாயக்கார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1851 மணியளவில் பாராளுமன்றமானது 2016 நவம்பர் 23ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






