இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 நவம்பர் 17ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-11-17

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிகுழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்

‘B’ : நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழ்ச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிகுழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்

‘C’ : கைவிரல் அடையாளங்களை இதுவரை வழங்காத பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை வழங்கல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை மதுவரித் திணைக்களம்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ சமிந்த விஜேசிறி                   
(ii) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

அரசாங்கத்தின் அபிவிருத்தி கருத்திட்டங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 58 பேருக்குமான இயக்க குத்தகை முறைமையின் கீழ் மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்தல்


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ எம். எஸ். தௌபீக் அவர்களுக்கு “இலங்கை சர்வதேச நேச்சர் லவிங் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2017) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2017) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாம் நாள் இன்றாகும்.


இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2016 நவம்பர் 18ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2017]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom