2016 நவம்பர் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-11-10 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 நிதியாண்டிற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டு வரைவு
(ii) 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் 4 ஆம் மற்றும் 7 ஆம் பிரிவுகளின் கீழ் வெளியிடப்படும் அரசிறை முகாமைத்துவ அறிக்கை - 2017
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) - இரண்டாம் மதிப்பீடு
நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் இன்று பி.ப. 02.00 மணியளவில் (2017ஆம் ஆண்டிற்கான) வரவு செலவுத்திட்ட உரையை ஆற்றினார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
2017 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கான குழு நிலையின் போது பிரேரிக்கப்படவுள்ள திருத்தங்கள் அனைத்தும், 2016 நவெம்பர் மாதம் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணி அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.
இதனையடுத்து, 1709 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2016 நவம்பர் 11ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2017]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






