இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஒக்டோபர் 28ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-10-28

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : 2016 நவம்பர் 09ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றிய பாதுகாப்பு தொடர்பானது


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நிர்வாக அறிக்கை

(ii) 2014 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் ஆணைக்குழு
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம்
(v) 2014 ஆம் ஆண்டுக்கான நவீன தொழில்னுட்பவியல்களுக்கான ஆதர் சீ கிளார்க் நிறுவகம்
(vi) 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான அறுவடைக்குப் பின் தொழில்நுட்ப நிறுவகம்
(vii) 2014 ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கி
(viii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(ix) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படை
(x) 2015 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம்
(xi) 2015 ஆம் ஆண்டுக்கான வளிமண்டலவியல் திணைக்ககளம்
(xii) 2015 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(xiii) 2015 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2016.09.23 ஆம் திகதியிலுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2016


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட திறைசேரி பிணை முறிகள் வழங்கல் பற்றிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன           - மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்

ஜெரூசலத்திலுள்ள அல்-ஹரம் சரீப் மற்றும் சுற்றுள்ள பிரதேசங்கள் மீது இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் சேதம் விளைவிக்கும் செயற்பாடுகளை கண்டிக்கும் நோக்கில் பாலஸ்தீனத்தினால் யுனெஸ்கோவில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின்போது இலங்கைத் தூதுக்குழு வாக்கெடுப்பிலிருந்து தவிர்ந்து கொண்டமை தொடர்பானது

(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழ் மொழியில் பாடநெறிகளை தொடர்வதற்கு தொழிற்பயிற்சி நிலையங்களில் வசதிகளை ஏற்பாடு செய்தல் தொடர்பானது


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ ஜீ. என். மஹசென் பெல்பொல
(ii) மறைந்த கௌரவ எஸ். எல். குணசேகர
(iii) மறைந்த கௌரவ கே. என். சொக்ஸி


அதனையடுத்து, 1520 மணியளவில் பாராளுமன்றம் 2016 நவம்பர் 10ஆந் திகதி வியாழக்கிழமை 1400 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom