இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஒக்டோபர் 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-10-26

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான சப்ரகமுவ பல்கலைக்கழகம்
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த பாளி பல்கலைக்கழகம்
(v) 2013 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவ பல்கலைக்கழக தொழிநுட்ப நிறுவனம்
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான ரஜரட்ட பல்கலைக்கழகம்
(vii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவனம்
(viii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகம்
(ix) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2016 ஆகஸ்ட் 19 ஆந் திகதிய-

(x) 1980/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi) 1980/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(xii) 2015 ஆம் ஆண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை

(xiii) 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் 60 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் நீதி அமைச்சரால் நீதியரசரின் ஒருமைப்பாட்டுடன் ஆக்கப்பட்டு, 2016 மே 16 ஆம் திகதிய 1967/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ வசந்த அலுவிஹாரே                   
(ii) கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே    - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ லக்கி ஜயவர்தன                                                - இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ ஹெக்டர் அப்புஹாமி அவர்களுக்கு “ஜயமக அபிவிருத்தி, சமூக சேவைகள், அறக்கட்டளை மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ இம்ரான் மஹ்ரூப் அவர்களுக்கு “கல்ஹின்ன ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கல்லுரி (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன (i) மற்றும் (ii) ஆகிய இரு சட்டமூலங்களும் முறையே சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கும் மற்றும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சருக்கும் ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன. (ii), (iii) மற்றும் (iv) ஆம் இலக்க விடயங்கள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

(i) துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தம்)
(ii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)
(iii) ஒதுக்கீடு (திருத்தம்)
- இரண்டாம் மதிப்பீட்டின் போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது (ஆதரவாக 112; எதிராக 45)
(iv) சோ்பெறுமதி வரி (திருத்தம்) -
       இரண்டாம் மதிப்பீடின் போது பெயர் மூல வாக்கெடுப்பு நடத்தப்பட்டது (ஆதரவாக 112; எதிராக 46)
      மூன்றாம் மதிப்பீடின் போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது (ஆதரவாக 76; எதிராக 23)


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஒக்டோபர் 27ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom