2016 ஒக்டோபர் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-10-25 |
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XX ஆம் பகுதியையும், நான்காவது தொகுதியின் XI ஆம் பகுதியையும்; மற்றும்
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XIV, XV மற்றும் XVI ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் IV ஆம் பகுதியையும், நான்காவது தொகுதியின் VIII, IX மற்றும் X ஆம் பகுதிகளையும்
சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான பதுளை மாவட்டச் செயலகம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை
(v) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை
(vi) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை
(vii) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை
(viii) 2013 ஆம் ஆண்டுக்கான நிர்மாணம் பயிற்சியளிப்பு அபிவிருத்திக்கான நிறுவனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(ix) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 32 ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 22 ஆம் பிரிவின் கீழ், வெளிநாட்டு மதுபான இறக்குமதி மற்றும் அவற்றின் மீது மதுவரியினை விதித்தல் தொடர்பிலான சட்டதிட்டங்களை விதிப்பது தொடர்பாக, நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2016 ஆகஸ்ட் 26 ஆந் திகதிய 1981/87 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய 1981/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ சுஜீவ சேனசிங்க - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ லஸந்த அலகியவன்ன
(iii) கௌரவ அசோக் அபேசிங்க - மூன்று மனுக்கள்
(iv) கௌரவ கருணாரத்ன பரணவிதான
(v) கௌரவ பந்துல குணவர்தன
(vi) கௌரவ சிறினால் டி மெல்
(vii) கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன
(viii) கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா - மூன்று மனுக்கள்
(ix) கௌரவ இஷாக் ரஹுமான்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
“யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு இளநிலை பட்டதாரிகளின் அண்மைய இறப்பு” சம்பந்தமாக கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் மற்றும் கௌரவ டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கேள்வி எழுப்பியதுடன் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களும் இதே பிரச்சினையுடன் யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கொழும்பு பகுதிகளில் இடம்பெற்ற ஏனைய மோசமான நிகழ்வுகள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் மேற்சொன்ன பாராளுமன்ற உறுப்பினர்களால் தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சருமானவர் பதிலளித்தார்.
(ii) யூனியன் வங்கி நிதிக் கம்பனியில் முதலீடு செய்தோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவர் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2014 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்காக
“காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு “சரவணபவன் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ செஹான் சேமசிங்க அவர்களுக்கு “மஹிபால ஹேரத் ஜனசஹன மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(iii) கெளரவ மலித் ஜயதிலக அவர்களுக்கு “மைத்திரிபால சிறிசேன லக்தரு திரிய மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழ்ச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிகுழு
கௌரவ புத்திக பத்திரண அவர்களால் பிரேரிக்கப்பட்டு கௌரவ லக்கி ஜயவர்தன அவர்களால் வழிமொழியப்பட்டு சபையினால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“2016.08.09 அன்று சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஒக்டோபர் 26ஆந் திகதி புதன்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






