2016 ஒக்டோபர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-10-07 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் பிரதி கிடைக்கப் பெறல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2014 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல்
(ii) வலுச்சக்தி
பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் அறிக்கைகளை சமர்ப்பித்தல்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
கௌரவ புத்திக பத்திறண - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
தேசிய வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சைகளுக்கான அறுவை சிகிச்சை அலகினை பராமரித்தல்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் இஸ்லாமாபாதில் நடைபெறவுள்ள 19வது சார்க் மாநாடு தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி சபையில் கூற்றினை முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1, 2 மற்றும் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-
(i) அரசாங்க பாடசாலைகளையும், பல்கலைக் கழகங்களையும் விடுமுறை நாட்களில் கற்கை அலகுகளுக்காகப் பெற்றுக்கொடுத்தல்
அரசாங்க பாடசாலைகளின் விடுமுறை நாட்களிலும் பிற்பகல் நேரத்திலும், பல்கலைக்கழகங்களின் விடுமுறை நாட்களிலும், அந்த நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு, வர்த்தக சமுதாயத்தினரையும், அரச சார்பற்ற அமைப்புகளையும், வர்த்தகச் சபைகளையும், சமுதாய அடிப்படையிலான அமைப்புகளையும் இணைத்துக் கொள்கின்றதான விரிவானதொரு வேலைத்திட்டமாக, முதியோர் மற்றும் முறைசாரா கற்கை அலகுகள் சலுகைக் கட்டண அடிப்படையில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
(ii) கால்நடைகளுக்கு உகந்த மேய்ச்சல் நிலம் ஒதுக்குதல்
திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 250,000 கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் தேவைப்படுவதாலும் மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட நிலம் இம்மாவட்டத்தில் காணப்படாமையால் பால் உற்பத்தியை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை பாதிப்புக்கு உள்ளாவதாலும் திருகோணமலை மாவட்டத்தில் உகந்ததொரு மேய்ச்சல் நிலம் அறிவிக்கப்பட்டு ஒதுக்கப்படுவதுடன் வர்த்தமானப் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
(iii) வட மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இலங்கை கல்வி நிருவாக சேவையின் விசேட பதவியணி வெற்றிடங்களை மூப்புரிமை மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டு நிரப்புதல் அத்துடன் போட்டிப் பரீட்சையிலிருந்து விடுவித்து III ஆம் தரத்திற்கு நியமித்தல்
வட மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இலங்கை கல்வி நிருவாக சேவையின் விசேட பதவியணி வெற்றிடங்களை நிரப்புதல் தொடர்பில் சரியான பகுப்பாய்வை மேற்கொண்டு இப்பதவிகளுக்குரிய கடமைகளை நிறைவேற்றி வருகின்ற இலங்கை அதிபர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களின் மூப்புரிமையையும், திறமையையும் கவனத்திற்கொண்டு இவர்களை இலங்கை கல்வி நிருவாக சேவை போட்டிப் பரீட்சையிலிருந்து விடுவித்து கல்வி நிருவாக சேவையின் III ஆம் தரத்திற்கு நியமிக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு தேசிய வரவு செலவுத்திட்டத்திலிருந்து பண ஒதுக்கலை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ புத்திக பத்திறண அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1530 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஒக்டோபர் 20ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






