இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஒக்டோபர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-10-06

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’  : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான நீர் வள சபையின் வருடாந்த அறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ ஜோன் அமரதுங்க                   
(ii) கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன்    
(iii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ  - நான்கு மனுக்கள்  
(iv) கௌரவ முஹமட் நவவி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்

தற்போது நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீருக்கான பெரும் தட்டுப்பாடு

(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

கிளிநொச்சி, இரணமடுவில் அமைந்துள்ள நீர்ப்பாசன குள அபிவிருத்தி கருத்திட்டம் காரணமாக மீனவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

காணி கொள்ளுதல் சட்டத்தின் கீழ் கட்டளை

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பதில் அதிபர்களுக்கான நிரந்தர நியமனங்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1850 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஒக்டோபர் 07ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom