இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஒக்டோபர் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-10-04

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-

‘A’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
‘B’ : உயர் பதவிகள் பற்றிய குழுவிற்கு தெரிவுக் குழுவினால் பெயர் குறிப்பிடப்படுதல்

துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு தெரிவுக் குழுவினால் பெயர் குறிப்பிடப்படுதல் -

‘C’ :  போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு
‘D’ :  உற்பத்திகளும் சேவைகளும்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை நில அளவைத் திணைக்களம்
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான சுதேச வைத்திய அமைச்சு
(iii)2015 ஆம் ஆண்டுக்கான மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iv) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் ஆண்டறிக்கை

(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்  “ஸ்ரீ லங்கா இன்டநஷனல் புடிஸ்ட் அகடமி” ஐப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து  ஆக்கப்பட்டு,   2016 சனவரி 06 ஆம் திகதிய 1948/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையைத் திருத்தி உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2016 ஆம் ஆகஸ்ட் 09 ஆம் திகதிய 1979/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் “கொழும்பு இன்டர்நஷனல் நோட்டிகல் அன்ட் இன்ஜீனீரிங் கொலேஜ் (பிரைவேற்) லிமிட்டெட்” ஐப் பட்டமளிக்கும் நிறுவகமாக  அங்கீகரித்து  ஆக்கப்பட்டு, 2013 யூலை 09 ஆம் திகதிய 1818/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையைத் திருத்தி உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் திகதிய 1979/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(vii) 2013 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள்
(ii) வியாபாரம் மற்றும் வணிகம்
(iii) சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை

பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் அறிக்கைகளை சமர்ப்பித்தல்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன                  
(ii) கௌரவ லக்கி ஜயவர்தன                   
(iii) கௌரவ எட்வட் குணசேகர                   
(iv) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே                   
(v) கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர                   
(vi) கௌரவ ஆனந்த அலுத்கமகே                   
(vii) கௌரவ ஹர்ஷன ராஜகருணா

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்

வட மாகாண சபை முதலமைச்சர் கௌரவ சி.வி. விக்னேஸ்வரன் அவர்களால் தெரிவிக்கப்பட்ட அண்மைய கூற்று தொடர்பானது

(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கப்பாச்சி பிரதேசத்தில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினை தொடர்பானது

(iii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

இரத்தினபுரி, கலவான தும்பர பகுதியில் வாழும் 10,000 மக்களுக்கான காணி உறுதி தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i) நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் எழுப்பிய வினாவுக்கு நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா அவர்கள் பதிலளித்தார்.

(ii) நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் எழுப்பிய வினாவுக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைஸர் முஸ்தபா அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சோ்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“சோ்பெறுமதி வரி (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 3 மற்றும் 4ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவை (திருத்தம்) - திருத்தங்களுடன்
(ii) சட்ட ஆணைக்குழு (திருத்தம்)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சூழல் காப்பு வலயமாக பண்டாரகம, கிந்தல்பிடிய மற்றும் பதுவில ஆகிய ஈரநிலப் பிரதேசங்களை பிரகடனம் செய்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1916 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஒக்டோபர் 05ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom