இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 செப்டெம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-09-07

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 1992 மே மாதம் 09 ஆம் திகதி நியூயோர்க்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டுக்கான பரிஸ் உடன்படிக்கையை ஒப்புதலளித்தல்

(ii) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபை
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான த அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தல்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ துமிந்த திசாநாயக்க                       - நான்கு மனுக்கள்
(ii) கௌரவ அமீர் அலி சிஹாப்தீன்                   
(iii) கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-

(i) கௌரவ முஜிபுர் ரஹுமான்
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
(iii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
(iv) கௌரவ உதய பிரபாத் கம்மன்பில


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கு நிரந்தர அந்தஸ்தினை வழங்கல்

(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

இளநிலை பயில் மாணவர்களிடையே எழுந்துள்ள சிக்கலான நிலைமை


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை நிதி அமைச்சர் கெளரவ ரவி கருணாநாயக்க அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமையைப் பெற்றுக் கொடுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ வேலு குமார் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2016 செப்டெம்பர் 08ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom