இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 செப்டெம்பர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-09-06

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான அரசாங்க மரக் கூட்டுத்தாபனம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான நில அளவைச் சபை
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
(v) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்
(vi) 2013 / 2014 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vii) 2015 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு
(viii) 2015 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாவட்டச் செயலகம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(ix) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 61 (1) ஆம் உப பிரிவின் (ஔ), (க) மற்றும் (த) பிரிவின் கீழ் கடற்றொழில், நீரக வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 செப்டெம்பர் 01 ஆம் திகதிய 1878/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 14அ, 14ஆ, 14இ, 14ஈ, 14உ, 14ஊ, 14எ, 14ஏ, 14ஐ, 14ஒ, 14ஓ 14ஔ, 14க மற்றும் 14ங பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61(1)(ந) பிரிவின் கீழ் கடற்றொழில், நீரக  வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்;

(x) 2014 செப்டெம்பர் 01 ஆம் திகதிய 1878/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xi) 2014 திசெம்பர் 12 ஆம் திகதிய 1892/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

(xii) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 61(1)(ஏ) பிரிவின் கீழ் உள்நாட்டலுவல்கள்,  கடற்றொழில், நீரக வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 மார்ச் 03 ஆம் திகதிய 1904/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(xiii) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 61(1) (த எ), (த ஏ) மற்றும் (ந) பிரிவுகளின் கீழ் கடற்றொழில் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 மார்ச் 26 ஆம் திகதிய 1907/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(xiv) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 61(1)(ஔ) மற்றும் (ந) பிரிவுகளின் கீழ் கடற்றொழில் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 மார்ச் 26 ஆம் திகதிய 1907/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(xv) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 30 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரக வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 யூலை 20 ஆம் திகதிய 1924/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(xvi) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 29 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரக வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 ஒக்தோபர் 26 ஆம் திகதிய 1938/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(xvii) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 61(1)(ந) பிரிவின் கீழ் கடற்றொழில், நீரக வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 ஒக்தோபர் 26 ஆம் திகதிய 1938/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(xviii) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 14அ, 14ஆ, 14இ, 14ஈ, 14உ, 14ஊ, 14எ, 14ஏ, 14ஐ, 14ஒ, 14ஓ 14ஔ, 14க மற்றும் 14ங பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61(1)(ந) பிரிவின் கீழ் கடற்றொழில், நீரக வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 திசெம்பர் 14 ஆம் திகதிய 1945/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(xix) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 61(1)(ந) பிரிவின் கீழ் கடற்றொழில், நீரக வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 திசெம்பர் 14 ஆம் திகதிய 1945/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                   
(ii) கௌரவ பாலித குமார தெவரப்பெரும       -  பன்னிரண்டு மனுக்கள்
(iii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி              -  மூன்று மனுக்கள்
(iv) கௌரவ பிமல் ரத்நாயக்க                   
(v) கௌரவ கே.கே. பியதாஸ                   
(vi) கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்

மலேசியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் மீதான தாக்குதல்

(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

கிளிநொச்சி வன்னேரிக் குளத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல்லிற்கான களஞ்சிய வசதிகள்

(iii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

யூனியன் வங்கி நிதிக் கம்பனியில் முதலீடு செய்தோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இலங்கை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் கூற்று” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2016 செப்டெம்பர் 07ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom