இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஆகஸ்ட் 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-08-26

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) (460 ஆம் அத்தியாயமான) காணி கொள்ளுதல் சட்டத்தின் 63 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (ஊ) ஆம் அத்தியாயத்தின் 2013 காணி கொள்ளல் சட்டத்தின் (நட்டஈடு செலுத்துதல்) ஒழுங்குவிதிகளின் திருத்தம் காணி அமைச்சரால் செய்யப்பட்டு, 2016 யூலை 26 ஆம் திகதிய 1977/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(ii) 2014 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விமான மற்றும் விமான சேவைகள் (இலங்கை) கம்பனி
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை காப்புறுதிச் சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்

(iv) 2016 யூன் 13 ஆம் திகதிய 1971/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(v) 2016 யூன் 13 ஆம் திகதிய 1971/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(vi) 2016 யூன் 28 ஆம் திகதிய 1973/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(vii) 2016 யூலை 12 ஆம் திகதிய 1975/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 47 (5) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 47 (5) இன் பிரகாரம் “இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ தயாசிறி ஜயசேகர                  - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ விஜித ஹேரத்                         - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ ஜே.சீ. அலவத்துவல               - மூன்று மனுக்கள்
(iv) கௌரவ க. துரைரெட்ணசிங்கம்                   
(v) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி       - இரண்டு மனுக்கள்
(vi) கௌரவ சந்திம வீரக்கொடி                  - இரண்டு மனுக்கள்
(vii) கௌரவ லஸந்த அலகியவன்ன            - நான்கு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

கிளிநொச்சியிலுள்ள வன்னேரிக் குளத்தினை புனர்நிர்மாணம் செய்தல் தொடர்பானது

(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 3/2016 இன் கீழ் ஓய்வூதிய சம்பள முரண்பாடு


அனுதாபப் பிரேரணைகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் காணி அமைச்சருமாகிய, காலஞ் சென்ற கௌரவ எம். கே. ஏ. டீ. எஸ். குணவர்தன அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“நுவரெலிய மாவட்டத்திற்கு வெளியே வசிக்கும் மாணவர்கள் நுவரெலிய மாவட்டத்தில் உயர் தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது அம்மாவட்டத்தில் வசிக்கும் மாணவர்கள் எதிர்கொண்டுள்ள அநீதி” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றம் 2016 செப்டெம்பர் 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom