2016 ஆகஸ்ட் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-08-25 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XIV ஆம் பகுதி;
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XI, XII மற்றும் XIII ஆம் பகுதிகள்; மற்றும்
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் III ஆம் பகுதியையும், இரண்டாவது தொகுதியின் XIII ஆம் பகுதியையும், ஐந்தாவது தொகுதியின் VI ஆம் பகுதியையும்
சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டுக்கான ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையின் ஆண்டறிக்கை
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகம்
(iii) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான சட்டமா அதிபதி திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ எஸ். பீ. திசாநாயக்க
(ii) கௌரவ கபீர் ஹஷீம் - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ அநுர திசாநாயக்க
(iv) கௌரவ அஜித் மான்னப்பெரும - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்
அரச துறை மற்றும் இராஜதந்திர சேவையில் உயர் பதவிகளுக்கு நியமிப்பவர்களின் தகுதியினை கருத்திற் கொள்வதில் தாமதம் பற்றியது
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ கே. காதர் மஸ்தான் அவர்களுக்கு “போ்ட்டி திஸாநாயக்க மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம்
சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“உள்ளூராட்சி மன்ற தேர்தலினை நடத்தாமை” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பந்துல குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஆகஸ்ட் 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






