2016 ஆகஸ்ட் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-08-24 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை விமானப் படை
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான புடவைக் கைத்தொழில் திணைக்களம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iv) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2016 மே 26 ஆம் திகதிய 1968/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை
(vi) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு
(ii) உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம்
(iii) கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி
(iv) சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை
ஆகிய துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் அறிக்கைகளை சமர்ப்பித்தல்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - நான்கு மனுக்கள்
(ii) கௌரவ கருணாரத்ன பரணவிதான
(iii) கௌரவ சீ. பீ. ரத்நாயக்க - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ நிஹால் கலப்பத்தி
(v) கௌரவ பிமல் ரத்நாயக்க - மூன்று மனுக்கள்
(vi) கௌரவ எட்வட் குணசேகர
(vii) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே - மூன்று மனுக்கள்
(viii) கௌரவ புத்திக பத்திறண - நான்கு மனுக்கள்
(ix) கௌரவ மயில்வாகனம் திலகராஜா
(x) கௌரவ முஹமட் நவவி
(xi) கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன
(xii) கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்
இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புற்ற அரநாயக்க மற்றும் ஏனைய பகுதிகளிலுள்ளோருக்கான நிவாரணம் தொடர்பானது
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தில் சுற்றுலா மையம் ஒன்றை தாபித்தல் தொடர்பானது
(iii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
யானைகள், கொம்பன்யானைகளின் பதிவுக்காக வருடாந்த அனுமதிப் பத்திரம் வழங்கும் போது இடம்பெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்கள், 2016 ஆகஸ்ட் 21 அன்று சன்டே டய்ம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ‘இலங்கையை ஊக்குவிப்பதற்கு ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளல்’ தொடர்பான கட்டுரை சம்பந்தமாக சபையில் கூற்றினை முன்வைத்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை நிதி அமைச்சர் கெளரவ ரவி கருணாநாயக்க அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 13 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் எட்டு கட்டளைகள்
(ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“ஒவ்வொரு தொகுதிக்கும் தேசிய பாடசாலை” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ முஹமட் நவவி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1840 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஆகஸ்ட் 25ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






