இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஆகஸ்ட் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-08-23

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’  : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரைகள் எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை புகையிரதத் திணைக்களம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம்
(iv) 2015 ஆண்டுக்கான அரசிறைக் கொள்கைகள் திணைக்களம் (பொதுத் திறைசேரி)
(v) 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான சட்ட வரைஞர் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(vi) 2014 ஆம் ஆண்டுக்கான முதியோர்களுக்கான தேசிய சபையின் ஆண்டு அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தல்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ ஜோன் அமரதுங்க                   
(ii) கௌரவ ஏ. டி. சுசில் பிரேமஜயந்த                   
(iii) கௌரவ வசந்த அலுவிஹாரே                   
(iv) கௌரவ நிஹால் கலப்பத்தி                   
(v) கௌரவ பிமல் ரத்நாயக்க                   
(vi) கௌரவ மாவை சோ. சேனாதிராசா                   
(vii) கௌரவ புத்திக பத்திறண                         - மூன்று மனுக்கள்
(viii) கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண                   
(ix) கௌரவ அசோக்க பிரியந்த                   
(x) கௌரவ சந்திம கமகே                   
(xi) கௌரவ சிசிர ஜயகொடி                   
(xii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ                   
(xiii) கௌரவ பியல் நிசாந்த த சில்வா              - இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

கடலரிப்பினால் ஒலிவில் பிரதேசத்தினை பாதுகாத்தல் தொடர்பானது

(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

கடலோரப் பாதுகாப்பு சேவையில் நிலவும் சம்பளங்கள் மற்றும் ஏனைய தொடர்புபட்ட பிரச்சினைகள் தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் எழுப்பிய வினாவுக்கு நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா அவர்கள் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ எஸ்.சீ. முத்துகுமாரன அவர்களுக்கு “செமட்ட சரண சஹண சேவா மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களுக்கு “சத்திய ஸ்ரீ கணபதி பக்தி ஜன சேவா மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

விலங்குத் தீனி (திருத்தச்) சட்டமூலம்

சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஆகஸ்ட் 24ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom