இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஆகஸ்ட் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-08-12

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழு
(ii) 2015 ஆண்டுக்கான குருணாகல் மாவட்ட செயலகம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iii) 2013 ஆம் இலங்கை இணக்கப்பாட்டுப் பணியகம்
(iv) 2014 ஆம் இலங்கை ஒத்தியல்பு மதிப்பீ்ட்டிற்கான தராதர அங்கீகார சபை
(v) 2013 ஆம் ஆண்டுக்கான சீதுவ, விஜய குமாரதுங்க மருத்துவமனை
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டுக் கடன் அபிவிருத்தி நிதியம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ எஸ். பீ. நாவின்ன                   
(ii) கௌரவ சந்திம வீரக்கொடி   - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ நிஹால் கலப்பத்தி                   
(iv) கௌரவ புத்திக பத்திறண         - நான்கு மனுக்கள்
(v) கௌரவ சந்தித் சமரசிங்க

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் விற்பனை தொடர்பாக கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் எழுப்பிய வினாவுக்கு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சந்திம வீரக்கொடி அவர்கள் பதிலளித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர் எதிர்நோக்கும் பிரச்சினைகள்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து,        மணியளவில் பாராளுமன்றம் 2016 ஆகஸ்ட் 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom