2016 ஆகஸ்ட் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-08-10 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா அபிவிருத்தி நிதியம்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஹோட்டல் மற்றும் முகாமைத்துவ நிறுவகம்
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
(v) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான தொழில் திணைக்களம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(ii) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
ஆகியவற்றின் அறிக்கைகளை சமர்ப்பித்தல்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ பாலித ரங்கே பண்டார - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி
(iii) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே
(iv) கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர
(v) கௌரவ விஜித பேருகொட
(vi) கௌரவ அஜித் மான்னப்பெரும
(vii) கௌரவ ஹெக்டர் அப்புஹாமி
(viii) கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்
(ii) கௌரவ நலின் பண்டாற ஜயமஹ
(iii) கௌரவ அநுர திசாநாயக்க
(iv) கௌரவ ஜயந்த சமரவீர
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
பாடசாலைப் பாடப் புத்தகங்களில் பண்டைய தமிழ் வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்காமை தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள், நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு பற்றிய அறிக்கை தொடர்பாக சபையில் கூற்றினை முன்வைத்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு “வடமேல் மாகாண ஹ்ருதய நோய் நிவாரண சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
சபையால் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஆகஸ்ட் 11ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






