இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஆகஸ்ட் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-08-09

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’  : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சான்றுரைகள்

‘B’  : “சேர் பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான ரணவிரு சேவா அதிகாரசபை
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான சமுத்திர பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் கடலோட்டு எந்திரவியல் தேசிய நிறுவனம்
(iii) 2014/15 ஆம் ஆண்டுக்கான சிறிலங்கன் எயார்லையின்ஸ்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iv) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு
(v) 2015 ஆம் ஆண்டுக்கான அரச தொழில்முயற்சிகள் திணைக்களம்
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்ட கட்டளைகள்;

(viii) 2016 ஏப்பிறல் 29 ஆந் திகதிய 1964/70 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(ix) 2016 மே 02 ஆந் திகதிய 1965/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(x) 2016 மே 16 ஆந் திகதிய 1967/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xi) 2016 மே 19 ஆந் திகதிய 1967/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 3 ஆம் உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்;

(xii) 2016 சனவரி 20 ஆம் திகதிய 1950/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xiii) 2016 சனவரி 28 ஆம் திகதிய 1951/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xiv) 2016 பெப்ரவரி 29 ஆம் திகதிய 1956/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xv) 2016 மார்ச் 08 ஆம் திகதிய 1957/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xvi) 2016 ஏப்பிறல் 01 ஆம் திகதிய 1960/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xvii) 2016 மே 12 ஆம் திகதிய 1966/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xviii) 2016 மே 20 ஆம் திகதிய 1967/57 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xix) 2016 யூன் 16 ஆம் திகதிய 1971/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

(xx) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 235) 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில்  2016 யூன் 16 ஆம் திகதிய 1971/23 இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(xxi) 2016 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (முதலாவது அறிக்கை)
(ii) வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(iii) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

ஆகியவற்றின் அறிக்கைகளை சமர்ப்பித்தல்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ அப்துல் ஹலீம்                             -       மூன்று மனுக்கள்
(ii) கௌரவ (திருமதி) விஜயகலா மகேஸ்வரன்                   
(iii) கௌரவ சுஜீவ சேனசிங்க                         -       மூன்று மனுக்கள்
(iv) கௌரவ வசந்த அலுவிஹாரே             -       இரண்டு மனுக்கள்
(v) கௌரவ ரோஹித அபேகுணவர்தன      -       இரண்டு மனுக்கள்
(vi) கௌரவ எம்.எஸ். தெளபீக்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

பறங்கியாறு கங்கையிலிருந்து நீரினை கால்வாய் ஊடாக பாலியாறு கங்கைக்கு தொடர்புபடுத்தும் நீர்ப்பாசன கருத்திட்டம் தொடர்பானது

(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

மாத்தளை வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கான இழப்பீடுகள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் தொடர்பாக கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் எழுப்பிய வினாவுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(i) 2015 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தினைத் திருத்துவதற்காக

“ஒதுக்கீடு (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை நிதி அமைச்சர் கெளரவ ரவி கருணாநாயக்க அவர்கள் பிரேரித்தார்.

(ii) 1969 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க சட்ட ஆணைக்குழுச் சட்டத்தினைத் திருத்துவதற்காக

“சட்ட ஆணைக்குழு (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசானுமாகிய கெளரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ கே.கே. பியதாஸ அவர்களுக்கு “லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களுக்கு “ராஜித சேனாரத்ன மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(iii) கெளரவ தேனுக விதானகமகே அவர்களுக்கு “லக் ஜனசெத்த மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“அபிவிருத்தி கருத்திட்டங்களை மதிப்பீடு செய்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ புத்திக பத்திறண அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1917 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஆகஸ்ட் 10ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom