2016 ஜூலை 20ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-07-20 |
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 121(1) ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான களனி பல்கலைக்கழகத்தின் பாளி, பௌத்த கல்வி பட்டப்பின்படிப்பு நிறுவனம்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான மொறட்டுவப் பல்கலைக்கழகம்
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவத்துறை நிறுவகம்
(v) 2013 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணனிக் கல்வி நிறுவனம்
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டப்பின் படிப்பு நிறுவனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vii) 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவப் (பொறுப்புச்) சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை 2016
(viii) 2015 ஆம் ஆண்டுக்கான சட்ட ஆணைக்குழுத் திணைக்களம்
(ix) 2015 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற்கோலாசானின் அலுவலகம்
(x) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை பொலிஸ் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
இளைஞர், விளையாட்டுத்துறை, கலை மற்றும் மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ காமினி லொக்குகே - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ வாசுதேவ நாணாயக்கார - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ அஜித் மான்னப்பெரும - நான்கு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
கிளிநொச்சி, பூநகரிலுள்ள மக்கள் குடிநீர் பிரச்சினையால் எதிர்கொள்ளும் சிக்கல்கள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள், நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு தொடர்பாக சபையில் கூற்றினை முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
விளையாட்டுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
சபையால் நிறைவேற்றப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மேல் மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்களின் குறைபாடு” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூலை 21ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






