இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஜூலை 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-07-08

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’  :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்

பின்வரும் குழுக்களுக்கு பிரதியிடப்பட்ட உறுப்பினர்களை தெரிவுக்குழு நியமித்துள்ளது-

‘B’  : வலுசக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
‘C’  :  உற்பத்திகளும் சேவைகளும் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

‘D’  :  அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய திட்டமிடல் திணைக்களம்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்
(iv) 2013 - 2014 ஆம் ஆண்டுக்கான கஹடகஹ கிறபைட் லங்கா லிமிடெட்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(ii) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

ஆகியவற்றின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே          -      எட்டு மனுக்கள்
(ii) கௌரவ நிஹால் கலப்பத்தி          -      ஆறு மனுக்கள்
(iii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி  -       ஐந்து மனுக்கள்
(iv) கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன   -       இரண்டு மனுக்கள்
(v) கௌரவ புத்திக பத்திறண             -      எட்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீத்தம் பழங்களுக்கான வரி

(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் விற்பனை


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் கௌரவ றிஸாட் பதியுதீன் அவர்கள், அத்தியவசிய பொருட்களின் விலைகள் தொடர்பாக சபையில் கூற்றினை முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“சேர்பெறுமதி வரி (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை நிதி அமைச்சர் கெளரவ ரவி கருணாநாயக்க அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 150 முதல் 152 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i) குற்றவியல் விடயங்களின் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(ii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம்


அதனையடுத்து, 1725 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூலை 20ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom