இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஜூன் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-06-21

கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது-

‘A’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிகள் கிடைக்கப் பெறல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் காணி உரித்து நிருணய ஆணையாளர் நாயகம்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற சபை முதல்வர் அலுவலகம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான வவுனியா மாவட்ட செயலகம்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
(v) 2015 ஆம் ஆண்டுக்கான அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(vi) 2014 ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி அமைச்சு
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சு
(viii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம்
(ix) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை துறைமுக அதிகாரசபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, பின்வரும் பல்கலைக்கழகங்கள் தாபிப்பது தொடர்பில் ஆக்கப்பட்ட கட்டளைகள்

(x) இலங்கை ருகுணு பல்கலைக்கழகம் - 2016 ஏப்பிறல் 26 ஆம் திகதிய 1964/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xi) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினைத் தாபிப்பது தொடர்பில் ஆக்கப்பட்டு  2016 ஏப்பிறல் 26 ஆம் திகதிய 1964/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ ஜோன் அமரதுங்க  
(ii) கௌரவ மஹிந்த அமரவீர  
(iii) கௌரவ அஜித் பி. பெரேரா - நான்கு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டத்தைத் திருத்துவதற்காக

“நடவடிக்கைமுறைச் சட்டக் கோவை (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஆட்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இரண்டாம்நிலை பாடசாலை கருத்திட்டத்திலுள்ள பிரச்சினைகள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1910 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூன் 22ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom