2016 ஜூன் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-06-10 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 154 ஆர் (4) பிரகாரம் மேதகு ஜனாதிபதி அவர்களுக்குச் சமர்ப்பிக்கும் பரிந்துரைகள்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான பொலன்னறுவை மாவட்டச் செயலகம்
(v) 2014 ஆம், 2015 ஆம் ஆண்டுக்களுக்கான இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி அதிகாரசபை
(vii) 2013 ஆம் ஆண்டுக்கான அணுசக்தி அதிகார சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ வஜிர அபேவர்தன - பதின் மூன்று மனுக்கள்
(ii) கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா
(iii) கௌரவ ஹர்ஷன ராஜகருணா - ஐந்து மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்
இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் எதிர்காலம்
(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
கொஸ்கம, சலாவா ஆயுதக் களஞ்சியசாலை வெடித்தலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம்
(iii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான பொது மன்னிப்பு
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, நிதி முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தைத் திருத்துவதற்காக
“நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கெளரவ நிதி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ முஹமட் நவவி அவர்களுக்கு “அமீர் அலி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(ii) கெளரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களுக்கு “இலங்கை சிறுவர் அபிவிருத்தி சங்கதைக் (SLACD) (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“வடக்கு மற்றும் கிழக்கில் வாழுகின்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ இராஜவரோதியம் சம்பந்தன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1853 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூன் 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






