இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஜூன் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-06-09

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்டச் செயலகம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான மாத்தறை மாவட்டச் செயலகம்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம்
(v) 2015 ஆம் ஆண்டுக்கான அரச நிதித் திணைக்களம்
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களம்
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நிதித் திணைக்களம்
(viii) 2015 ஆம் ஆண்டுக்கான அரச கணக்குகள் திணைக்களம்
(ix) 2015 ஆம் ஆண்டுக்கான உணவு ஆணையாளர் திணைக்களம்
(x) 2015 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
(xi) 2015 ஆம் ஆண்டுக்கான சட்டம், சமாதானம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு
(xii) 2015 ஆம் ஆண்டுக்கான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(xiii) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை

(xiv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் அச்சட்டத்தின் 70 இ பிரிவின் கீழ் அறிக்கையொன்றைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் லங்கா இன்டநஷனல் புடிஸ்ட் அகடமி நிறுவனம் பட்டமளிக்கும் நிறுவனமொன்றாக அங்கீகரித்து 2016 சனவரி 06 ஆம் திகதிய 1948/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(xv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் அச்சட்டத்தின் 70 இ பிரிவின் கீழ் அறிக்கையொன்றைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் நஷனல் ஸ்கூல் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மன்ட் லிமிடெட் நிறுவனம் பட்டமளிக்கும் நிறுவனமொன்றாக அங்கீகரித்து 2016 சனவரி 19 ஆம் திகதிய 1950/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

கிளிநொச்சியில் குடிநீர் பிரச்சினைகள்

(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

நூதனசாலையிலிருந்து அலரி மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்ட புத்தர் சிலை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

நம்பிக்கையில்லாப் பிரேரணை

நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையின்மை, பெயர்மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 51; எதிராக 145) பின்னர் நிராகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1825 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூன் 10ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom