2016 ஜூன் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-06-07 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்
பின்வரும் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் கடமையாற்றுவதற்கான உறுப்பினர்களாக தெரிவுக் குழுவினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளோர்
‘B’ : சர்வதேச தொடர்புகள்
‘C’ : வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள்
‘D’ : பெண்கள் மற்றும் பால்நிலை
பின்வரும் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு பிரதியிடப்பட்ட உறுப்பினர்களை தெரிவுக்குழு நியமித்துள்ளது-
‘E’ : கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி
‘F’ : சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல்
‘G’ : வலுச்சக்தி
‘H’ : உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம்
‘I’ : நல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டியெழுப்புதல்
சபாநாயகரின் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்,
• 2011 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாம் தொகுதியின் IV ஆம் பகுதி;
• 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஆறாம் தொகுதியின் XXIV ஆம் பகுதி;
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் VIII ஆம் பகுதியையும், இரண்டாவது தொகுதியின் XIX ஆம் பகுதியையும், நான்காவது தொகுதியின் VI, VII, VIII, IX மற்றும் X ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும் ஆறாவது தொகுதியின் I, II, III, IV மற்றும் V ஆம் பகுதிகள்; மற்றும்
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் I, II ஆம் பகுதிகளையும், இரண்டாவது தொகுதியின் VI, VII, VIII, IX மற்றும் X ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் III ஆம் பகுதியையும், நான்காவது தொகுதியின் VI, VII ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் I, II மற்றும் III ஆம் பகுதிகளையும்
சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான காலி மாவட்டச் செயலகம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான களுத்துறை மாவட்ட செயலகம்
(v) 2015 ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட செயலகம்
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்டச் செயலகம்
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான மொனராகல நிருவாக மாவட்டச் செயலகம்
(viii) 2014 ஆம் ஆண்டுக்கான சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு
(ix) 2014 ஆம் ஆண்டுக்கான கல்வி வெளியிட்டுத் திணைக்களம்
(x) 2015 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைத் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(xi) 2015 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2016.05.17 ஆம் திகதியில் உள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2016
(xii) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ சந்திம வீரக்கொடி - ஐந்து மனுக்கள்
(ii) கௌரவ சுஜீவ சேனசிங்க - பத்து மனுக்கள்
(iii) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - பதினாறு மனுக்கள்
(iv) கௌரவ பாலித குமார தெவரப்பெரும - ஐந்து மனுக்கள்
(v) கௌரவ அநுர திசாநாயக்க - இரண்டு மனுக்கள்
(vi) கௌரவ நிஹால் கலப்பத்தி - மூன்று மனுக்கள்
(vii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி - ஒன்பது மனுக்கள்
(viii) கௌரவ புத்திக பத்திறண - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்
கொஸ்கம இராணுவ முகாமில் வெடிப்பு
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
அரச அலுவலகங்களில் அரச மொழியாக தமிழ் மொழியை வலுப்படுத்தல்
சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு 2016.06.07 அன்று முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கெளரவ முத்து சிவலிங்கம் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) ஓமியோபதிசார் மருத்துவப் பேரவை ஒன்றினைத் தாபிப்பதற்கும்; ஓமியோபதிசார் தொழிலாளர்களையும் ஓமியோபதிசார் மருந்தாளர்களையும் பதிவுசெய்வதற்கும் நிறைவேற்றுப் பணிப்பாளரொருவரை நியமிப்பதற்கும்; ஓமியோபதிசார் நிறுவனங்களைப் பதிவுசெய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும்; ஓமியோபதிசார் மருத்துவ முறைமையை மேம்படுத்துவதற்கும், வளர்ப்பதற்கும் மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கும் மற்றும் ஓமியோபதி மருந்துகளினதும், ஔடதங்களினதும், வேறு ஓமியோபதிசார் தயாரிப்புகளினதும் உற்பத்தி, இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விற்பனை, விநியோகம் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்; 1970 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, ஓமியோபதிச் சட்டத்தினை நீக்கம் செய்வதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்காக
“ஓமியோபதி”
எனும் சட்டமூலத்தினை கெளரவ சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
(ii) 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“மத்தியஸ்த சபை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு “ஜனகரலிய கலாச்சார மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கல்வி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(ii) கெளரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன அவர்களுக்கு “ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“கல்வி” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1840 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூன் 08ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






