இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 மே 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-05-04

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை மகாவலி அதிகாரசபை
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை கட்டளைகள் நிறுவனம்
(iv) 2013 – 2014 ஆண்டுக்கான மில்கோ (பிறைவேற்) லிமிட்டெடின் வருடாந்த அறிக்கை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(v) 2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை விமானப் படை
(vi) 20112012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை கடற்படை

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ பிமல் ரத்நாயக்க   - 3 மனுக்கள்
(ii) கௌரவ புத்திக பத்திறண    - 3 மனுக்கள்
(iii) கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-

(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
(ii) கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்த அவர்கள்

யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பானது


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை (ஆஉமுவ) தாபிக்கின்ற உடன்படிக்கைக்கு இலங்கை ஒரு கையொப்பமிடுநராக அவ்வுடன்படிக்கை இலங்கையினால் ஏற்புறுதி செய்யப்படுவதனை அல்லது ஏற்றுக்கொள்ளப்படுவதனை அதிகாரமளித்து அவ்வங்கியின் உறுப்பினரொருவராக வருவதற்கு இலங்கையை இயலச்செய்வதற்கும், அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்படிக்கை (ஏற்புறுதி)”

எனும் சட்டமூலத்தினை கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ எட்வட் குணசேகர அவர்களுக்கு “மட்டுப்படுத்தப்பட்ட ஸ்ரீ வித்யாவாச சமூக சேவைகள் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமானவருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

கெளரவ புத்திக பத்திறண அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) வைட் றோஸ் மன்ற (கூட்டிணைத்தல்)
(iii) இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்)

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் முறையே (ii) சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கும் (iii) சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சருக்கும் ஆற்றுப்படுத்தப்பட்டன.

(iv) கெளரவ இம்ரான் மஹ்ரூப் அவர்களுக்கு “அக்குறணை பைதுஸ் ஸகாத் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

நுண்நிதியளிப்புச் சட்டமூலம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“நாடகம், ஒபெரா மற்றும் சங்கீத கலாசாரத்தை விருத்தி செய்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எட்வட் குணசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1910 மணியளவில் பாராளுமன்றம் 2016 மே 05ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom