இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 மே 03ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-05-03

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்
‘B’ : “தகவலுக்கான உரிமை” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘C’ : “கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்)” எனும் தனியார் உறுப்பினர் சட்டமூலம் தொடர்பானது
‘D’ :  துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்


சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-

• 2011 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XII ஆம் பகுதி;
• 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XIII ஆம் பகுதி; மற்றும்
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் V ஆம் பகுதி மற்றும் நான்காம் தொகுதியின் II, III, IV மற்றும் V ஆம் பகுதிகளையும்

சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆராய்ச்சி மன்றம்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபை
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான லோஹோர் சீமாட்டி கடன் நிதியம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(v) 2015 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2016.04.05 ஆம் திகதியில் உள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட  குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2016


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ பி. ஹரிசன்                                      - 2 மனுக்கள்
(ii) கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார                   
(iii) கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன       - 2 மனுக்கள்
(iv) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                         - 9 மனுக்கள்
(v) கௌரவ விஜித ஹேரத்                                 - 4 மனுக்கள்
(vi) கௌரவ குமார வெல்கம                   
(vii) கௌரவ ரோஹித அபேகுணவர்தன            - 2 மனுக்கள்
(viii) கௌரவ நிஹால் கலப்பத்தி                        - 4 மனுக்கள்
(ix) கௌரவ எட்வட் குணசேகர                         - 3 மனுக்கள்
(x) கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன                   
(xi) கௌரவ சந்தித் சமரசிங்க                             - 2 மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அதனையடுத்து, 1505 மணியளவில் பாராளுமன்றம் 2016 மே 04ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom