இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஏப்ரல் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-04-07

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-

‘A’ : பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள நகல் ஒழுக்கநெறிக் கோவையை பகிர்ந்தளித்தல்

‘B’ : அரசாங்கப் பொறுப்பு  முயற்சிகள் குழு
‘C’ : அரசாங்க் கணக்குக் குழு

ஆகியவற்றில் கடமையாற்றுவதற்கு மேலதிக உறுப்பினர்களாக தெரிவுக் குழுவினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளோர்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன                   
(ii) கௌரவ சந்தித் சமரசிங்க

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ கே. காதர் மஸ்தான் அவர்களுக்கு “அல் ஜாமியாத்துல் கவ்ஸிய்யா (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சட்டமூலம் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிரான இணக்கப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“மின்சார நெருக்கடி” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1847 மணியளவில் பாராளுமன்றம் 2016 மே 03ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom