இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஏப்ரல் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-04-05

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-

‘A’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் இலங்கை களனி பல்கலைக்கழகத்தினைத் தாபிப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 திசெம்பர் 30 ஆம் திகதிய 1947/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினைத் தாபிப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2016 சனவரி 08 ஆம் திகதிய 1948/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் இலங்கை றுஹுணு பல்கலைக்கழகத்தினைத் தாபிப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2016 சனவரி 08 ஆம் திகதிய 1948/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தினைத் தாபிப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2016 பெப்புருவரி 19 ஆம் திகதிய 1954/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(v) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய லொத்தர் சபை
(vi) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vii) 1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் சட்டத்தின் 60 ஆம் பிரிவின் கீழ் உணவு பாதுகாப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 யூலை 2 ஆம் திகதிய 1921/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ ரஊப் ஹகீம்                   
(ii) கௌரவ ஏ.ஏ. விஜேதுங்க    - 2 மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ எம்.எஸ். தெளபீக் அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(i) மூதூர் நத்வதுல் உலமா அறபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)
(ii) ரிழ்வானிய்யா அரபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)
(iii) பரீரா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.

(iv) கெளரவ மயந்த திசாநாயக்க அவர்களுக்கு “1998  ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, இலங்கை உள்ளக வடிவமைப்பாளர் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1325 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஏப்ரல் 06ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom