இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 மார்ச் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-03-24

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2016 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க குறைநிரப்பும் மதிப்பீடு


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                   
(ii) கௌரவ காமினி லொக்குகே                   
(iii) கௌரவ நிஹால் கலப்பத்தி                   
(iv) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே  - 5 மனுக்கள்
(v) கௌரவ புத்திக பத்திறண   - 10 மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் அலுவலக புதிய கட்டிடம் மற்றும் வீடமைப்புத் திட்டம் தொடர்பாக பேணப்படுகின்ற கொள்வனவு நடைமுறையிலுள்ள சிக்கல்கள் தொடர்பானது


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அணுக்கம் மறுக்கப்படக்கூடிய ஏதுக்களைக் குறித்துரைப்பதற்கும்; தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவினைத் தாபிப்பதற்கும்; தகவல் அலுவலர்களின் நியமனத்திற்கும்; தகவலைப் பெறுவதற்கான நடவடிக்கை முறைகளைத் தருவதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“தகவலுக்கான உரிமை”

எனும் சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ ரஞ்சித் அலுவிஹாரே அவர்களுக்கு “எம்.எஸ். தௌபீக் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் அவர்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(ii) கெளரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்களுக்கு “போத்தல – மீபாவல ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரை கல்வி நிவாரண மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமானவருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் 2016.03.23 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை பற்றி 2016.03.08 அன்று பிரதம அமைச்சரினால் விடுக்கப்பட்ட கூற்று” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை தொடரப்பட்டது.


அதனையடுத்து, 1915 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஏப்ரல் 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom