இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 மார்ச் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-03-23

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-

‘B’ : பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பதவிப் பெயரில் மாற்றம்
‘C’ : உறுப்பினர்களுக்கான Wi-Fi இணைப்பு
‘D’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
‘E’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2014 ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான மின்வலு சக்தி அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(v) 2014 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை  அணுசக்தி சட்டத்தின் கீழ் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையினால் ஆக்கப்பட்டு 2015 யூலை 21 ஆம் திகதிய 1924/27 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப்பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டின்  01 ஆம் இலக்க அணுசக்தி ஒழுங்குவிதி (அனுமதிப் பத்திரம்) மற்றும் 2015 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அணு சக்தி (செயன்முறை மேற்கொள்வதற்கான எண்ணம் பற்றிய அறிவித்தல்) ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ ரஞ்சித் சியம்பலாபிடிய  - 2 மனுக்கள்
(ii) கௌரவ லக்கி ஜயவர்தன   - 2 மனுக்கள்
(iii) கௌரவ எட்வட் குணசேகர                   
(iv) கௌரவ ஜயந்த சமரவீர                   
(v) கௌரவ பாலித தெவரப்பெரும   - 9 மனுக்கள்
(vi) கௌரவ செஹான் சேமசிங்க                   
(vii) கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே                   
(viii) கௌரவ சந்திம கமகே    - 2 மனுக்கள்
(ix) கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போதான தாக்குதல் தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

அண்மைய மின்சாரத் துண்டிப்பு தொடர்பாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர், கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள் அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றினை முன்வைத்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ சிறினால் டி மெல் அவர்களுக்கு “பிலியந்தல தர்மசாஸ்தரோதய பிரிவேன் விகாரஸ்த சங்வர்தன சபாவ (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமானவருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(ii) கெளரவ இஷாக் ரஹுமான் அவர்களுக்கு “அக்குறனை ஜாமிஆ ரஹ்மானியா அறபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை பற்றி 2016.03.08 அன்று பிரதம அமைச்சரினால் விடுக்கப்பட்ட கூற்று” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1925 மணியளவில் பாராளுமன்றம் 2016 மார்ச் 24ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom