இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 மார்ச் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-03-09

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(ii) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 213 ஈ பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய அச் சட்டத்தின் 237 ஆவது பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2015 திசெம்பர் 22 ஆந் திகதிய 1946/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்

(iii) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் ஆண்டு அறிக்கை

(iv) 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்கம் கொண்ட விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிரான இணக்கப்பாட்டுச் சட்டத்தின் 34 ஆம் வாசகத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 சனவரி 18 ஆந் திகதிய 1950/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா              - 4 மனுக்கள்
(ii) கௌரவ விதுற விக்கிரமநாயக்க                   
(iii) கௌரவ பியல் நிசாந்த த சில்வா                   
(iv) கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-

(i) கௌரவ எட்வட் குணசேகர
(ii) கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்
(iii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
(iv) கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

இந்திய-இலங்கை இடையே முன்மொழியப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தினால் (ECTA) எதிர்நோக்கும் பிரச்சினைகள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

- பொலிஸ் திணைக்களத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகளின் பதவியுயர்வு வாய்ப்புக்களில் போது  கையாளும் நிபந்தனைகளிலான சிக்கல்கள் தொடர்பாக கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால்

- யாழ்ப்பாணத்தில் சமூக சீரழிவு தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக கௌரவ டக்ளஸ் தேவானந்தா  அவர்களால்

எழுப்பிய வினாக்களுக்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்நாயக்க அவர்கள் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ எஸ். சீ. முத்துகுமாரன அவர்களுக்கு “செத்சத யோகா நிகேதனய கார்ய பாரய (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான தீர்மானம்

திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1820 மணியளவில் பாராளுமன்றம் 2016 மார்ச் 10ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom