இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 மார்ச் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-03-08

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-

‘A’ : “வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி” மற்றும் “வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம்” எனும் சட்டமூலங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

‘B’ : கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவகம்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iv) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படை
(v) 2014 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களம்
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(vii) 2015 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2016.02.23 ஆம் திகதியில் உள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட  குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2016

(viii) 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் 45 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் நீதி அமைச்சரால் ஆக்கப்பட்ட 1954/34 ஆம் இலக்க 2016 பெப்புருவரி மாதம் 18 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ வஜிர அபேவர்தன       - 3 மனுக்கள்              
(ii) கௌரவ கயந்த கருணாதிலக்க
(iii) கௌரவ அஜித் பி. பெரேரா        - 3 மனுக்கள்
(iv) கௌரவ அநுர திசாநாயக்க  - 4 மனுக்கள்
(v) கௌரவ அஜித் மான்னப்பெரும - 3 மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i) பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக சபையில் கூற்றினை முன்வைத்தார்.

(ii) யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதை அபிவிருத்தி வேலை தொடர்பாக கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் எழுப்பிய வினாவுக்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பதிலளித்தார்.

(iii) “தகவலுக்கான உரிமை” எனும் சட்டமூலம் அடுத்த அமர்வு வாரத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் அறிவித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

இலங்கையில் உளதாயிருந்த ஆயுதந்தாங்கிய பயங்கரவாதக் குழுவொன்றின் செயற்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் தமது உரிமைகளைத் தொடருவதற்கு அல்லது தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இயலாதிருக்கின்ற ஆட்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விசேட சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதற்கு இடைநோ்விளைவான கருமங்கள் ஆகியவற்றை இயலச் செய்வதற்காக

“ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்)”

எனும் சட்டமூலத்தினை கெளரவ நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமானவர் பிரேரித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“காணாமற் போனோர் மற்றும் சிறையிலிருப்போர்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ இராஜவரோதியம் சம்பந்தன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2016 மார்ச் 09ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom