இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 பெப்ரவரி 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-02-26

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி  அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்

(i) 2015 யூன் மாதம் 04 ஆம் திகதிய 1917/44 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை
(ii) ஓகத்து மாதம் 21 ஆம் திகதிய 1928/23 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை
(iii) 2015 நவெம்பர் மாதம் 26 ஆம் திகதிய 1942/15 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை
(iv) 2015 யூன் மாதம் 26 ஆம் திகதிய 1920/37 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை
(v) 2015 செத்தெம்பர் மாதம் 28 ஆம் திகதிய 1934/7 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை
(vi) 2015 திசெம்பர் மாதம் 30 ஆம் திகதிய 1947/25 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை
(vii) 2015 யூலை மாதம் 15 ஆம் திகதிய 1923/40 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ காமினி லொக்குகே
(ii) கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன - 2 மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

யாழ்ப்பாணத்தில் சமூக சீரழிவு தொடர்பான சம்பவங்கள்

கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

வேலையில்லாப் பட்டாதிரிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள்

கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துதல்


பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போதான பிரேரணைகள்

அரசாங்க கணக்குகள் பற்றிய குழு

125 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும், 2015 நவம்பர் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல், அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவானது தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் இருபத்தாறு (26) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.

பொது முயற்சிகள் பற்றிய குழு

126 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும், 2015 நவம்பர் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல் பொது முயற்சிகள் பற்றிய குழுவானது தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் இருபத்தாறு (26) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.

பொது மனுக்கள் பற்றிய குழு

128 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும், 2015 நவம்பர் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல் பொது மனுக்கள் பற்றிய குழுவானது தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் இருபதிரெண்டு (22) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.

உயர் பதவிகள் பற்றிய குழு

128 (அ) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளினாலும், 2015 ஒற்றோபர் 08 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட  பிரேரணையினாலும் தடைபெறாமல், உயர் பதவிகள் பற்றிய குழுவானது தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் பதினைந்து (15) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“2016.02.12 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கடற்றொழில், நீ்ர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2016 மார்ச் 08ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom