இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 பெப்ரவரி 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-02-23

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்

பின்வரும் சட்டமூலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
‘B’ : வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம்
‘C’ : வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி

‘D’ : “பௌத்த அறநிலையங்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டுக்கான புடவைக் கைத்தொழில் திணைக்களம்
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான  இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iv) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழு
(v) 2013 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி லொத்தர் சபை
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனி

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ தலதா அதுகோரல  - 2 மனுக்கள்
(ii) கௌரவ சுஜீவ சேனசிங்க  - 7 மனுக்கள்
(iii) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே  - 4 மனுக்கள்
(iv) கௌரவ அசோக் அபேசிங்க
(v) கௌரவ குமார வெல்கம
(vi) கௌரவ ஹர்ஷன ராஜகருணா
(vii) கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக வெளிநாடுகளுடன் உத்தேசிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாக சபையில் கூற்றினை முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான தீர்மானம்

ஒத்திவைக்கப்பட்ட விவாதம் நாளை தொடரப்படவுள்ளது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2016 பெப்ரவரி 24ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom