2016 பெப்ரவரி 12ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-02-12 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-
‘A’ : துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் சம்பந்தமான செயலமர்வு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேயிலை சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 03 ஆம் பிரிவின் கீழ், உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்
(iii) 2015 நவெம்பர் 20 ஆந் திகதிய 1941/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(iv) 2016 சனவரி 12 ஆந் திகதிய 1949/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(v) 2011 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மூலம் இறுதியாகத் திருத்தப்பட்டவாறான 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 03 (இ) ஆம் பிரிவின் கீழ், உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2015 நவெம்பர் 20 ஆந் திகதிய 1941/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi) காலத்துக்குக் காலம் திருத்தப்பட்ட செய்யப்பட்டவாறு மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 25 ஆம் பிரிவின் கீழ், மதுபானங்களின் செறிவின் அளவு தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 திசெம்பர் 15 ஆம் திகதிய 1945/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii) காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டவாறு மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 25 ஆம் பிரிவின் கீழ், வருடாந்த உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 திசெம்பர் 15 ஆம் திகதிய 1945/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 25 ஆம் பிரிவின் கீழ், ஹோட்டல்களில் மதுசாரப் பாவனையுடன் தொடர்புபட்ட கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2015 திசெம்பர் 31 ஆம் திகதிய 1947/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 4 ஆம் மற்றும் 13 ஆம் பிரிவுகளின் கீழ், வெளிநாட்டு மதுபானம் விநியோகம் மற்றும் இடப்பெயர்வு தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 திசெம்பர் 31 ஆம் திகதிய 1947/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டவாறு மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 22 ஆம் பிரிவின் (1) ஆம் உப பிரிவின் கீழ், மதுவரி தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்
(x) 2015 திசெம்பர் 31 ஆம் திகதிய 1947/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xi) 2015 நவெம்பர் 20 ஆம் திகதிய 1941/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xii) 2015 திசெம்பர் 04 ஆம் திகதிய 1943/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xiii) 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைக் கட்டணம் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் முத்திரைக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2016 சனவரி 01 ஆம் திகதிய 1947/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv) 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய அச்சட்டத்தின் 26 ஆவது பிரிவின் கீழ் சர்வதேச தொலைத்தொடர்பு இயக்குநர்கள் அறவீடு தொடர்பில் விதிக்கப்பட்டதுமான, 2015 திசெம்பர் 14 ஆம் திகதிய 1945/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி - 5 மனுக்கள்
(ii) கௌரவ புத்திக பத்திறண
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
யாழ்ப்பாண கோட்டை புனரமைப்பு தொடர்பாக கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் எழுப்பிய வினாவுக்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
கடற்றொழில், நீ்ர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம்
சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பாராளுமன்ற பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) வடக்கு கிழக்கில் காணாமற் போன தமிழ் மக்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குதல்
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தம் நடைபெற்ற கடந்த மூன்று தசாப்த காலமாக பல்வேறு காரணங்களால் காணாமற் போயுள்ளவர்கள் தற்போது உயிர் வாழ்கின்றார்களா, இல்லையா என்பதையிட்டு துரிதமாக விசாரணை செய்து, இவர்கள் உயிருடன் இல்லாதிருப்பின் இவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
(ii) திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்திற்கு மாற்றுதல்
திருகோணமலை கடற்படை முகாம் வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் உள்ள பிரதான இராணுவத் தளமாக இருந்த போதிலும், யுத்த முடிவின் பின் புல்மோட்டை தொடக்கம் லங்காபட்டணம் வரை பல சிறிய கடற்படை மற்றும் இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டுள்ளதோடு அந்த முகாம்கள் தொழில்முயற்சியாண்மை, மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு தடையாக அமைவதனால், மக்களின் சுபீட்சகரமான வாழ்விற்கு உதவும்முகமாக அந்த இராணுவ முகாம்களை வேறு இடத்திற்கு மாற்றுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
(iii) நாட்டினுள் காணப்படுகின்ற யுத்தகால சிதைவுகளை புனரமைத்து மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தல்
நாட்டில் நிலவிய யுத்த நிலவரம் காரணமாகவும் இராணுவ நடவடிக்கைகளினாலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் அழிவடைந்த நிலையிலுள்ள கட்டிடங்கள், நீர்த்தாங்கிகள், புகையிரதங்கள், பஸ் வண்டிகள், விமானங்கள் என்பவற்றை காட்சி நிலையங்களாகவும் பாதுகாப்பு இடங்களாகவும் அரச செலவில் தொடர்ச்சியாகப் பராமரித்துப் பேணி வருதல் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தடையாக இருப்பதனால், நாட்டின் இன்றைய இளைஞர் சந்ததியினர் மற்றும் எதிர்கால சந்ததியினர் மத்தியில் நாட்டில் ஏற்பட்ட யுத்தகால அழிவுகள் தொடர்பான நினைவுகளை இல்லாமல் செய்யும் நோக்கத்துடன் இவ்வாறு அழிவுற்ற இடங்களையும் ஏனைய உடைமைகளையும் மீண்டும் புனரமைத்து மக்களின் நலன்கருதி அவற்றை பாவிப்பதற்கு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
(iv) அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் கணிப்பிடப்படும் 40% கழிப்பனவு எல்லையை கொடுப்பனவுகளுடன் கூடிய மொத்தச் சம்பளத்திலிருந்து கணிப்பிடல்
அரச நிதி ஒழுங்குவிதிக் கோவைக்கமைய கடன் பெறும்போது 40% கழிப்பனவு எல்லை அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் கணிப்பிடப்படுவதால், அரச ஊழியர்களுக்கு அவசர தேவையொன்றின்போது அல்லது வீட்டுத் திருத்தவேலைக்கு அரசாங்க வங்கியொன்றிலிருந்து அல்லது அரச துணை நிறுவனமொன்றிலிருந்து கடன் தொகையொன்றை பெறுவதற்கு மேற்படி காலங்கடந்த சட்டம் இடையூறாக இருக்கின்ற போதிலும், ஏழாண்டு ஆதனக் கடனை பெறுகையில் ஐந்தாண்டு கால நிரந்தர ஓய்வூதியத்துடன் கூடிய சேவைக்காலம் கருத்திற் கொள்ளப்படுவதால், மேற்படி கழிப்பனவு எல்லை ஏற்புடையதாகாதென்ற போதிலும், அரச சேவைக்கு புதிதாக இணைகின்ற அரச ஊழியரொருவருக்கு மேற்படி கழிப்பனவு எல்லை காரணமாக கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்வது கடினமாக இருப்பதால் 40% கழிப்பனவு எல்லை கொடுப்பனவுகளுடன் கூடிய மொத்தச் சம்பளத்தின் அடிப்படையில் கணிப்பிடப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலங்கை ஆசிரியர் பயிற்றுனர்கள் சேவையை நிறுவுதல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1845 மணியளவில் பாராளுமன்றம் 2016 பெப்ரவரி 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






