2016 பெப்ரவரி 11ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-02-11 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2014 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2015.12.31 ஆம் திகதியில் உள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2015
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ திலிப் வெதஆரச்சி
(ii) கௌரவ விஜித ஹேரத்
(iii) கௌரவ லக்கி ஜயவர்தன
(iv) கௌரவ நிஹால் கலப்பத்தி
(v) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே - 2 மனுக்கள்
(vi) கௌரவ புத்திக பத்திறண - 10 மனுக்கள்
(vii) கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம
(viii) கௌரவ எஸ்.எம். மரிக்கார் - 2 மனுக்கள்
(ix) கௌரவ சாலிந்த திசாநாயக்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
23(2) இன் கீழ் கேட்கப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கும் முகமாக அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றினை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கௌரவ பைஸர் முஸ்தபா அவர்கள் முன்வைத்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ கே. காதர் மஸ்தான் அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(i) ஜம்மிய்யத்துஸ் ஸஹ்வா அல்-கைரிய்யா (ஜஸ்கா) (கூட்டிணைத்தல்)
(ii) ஸ்ரீ லங்கா செத்சேவா மன்ற (கூட்டிணைத்தல்)
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் முறையே (i) தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சருக்கும் (ii) சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சருக்கும் ஆற்றுப்படுத்தப்பட்டன.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் இரண்டு கேட்கப்பட்டன:-
(i) கௌரவ நிஹால் கலப்பத்தி
(ii) கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
அதனையடுத்து, 1845 மணியளவில் பாராளுமன்றம் 2016 பெப்ரவரி 12ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






