இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஜனவரி 28ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-01-28

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’  :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
‘B’   : தெரிவுக்குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (சிறிலங்கா) கம்பனி
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான முதியோர்களுக்கான தேசிய சபை
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபை
(v) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்களின் கணக்காய்வு
(vi) 2013 ஆம் ஆண்டுக்கான துறுசவிய நிதியம்
(vii) 2012/2013 ஆம் ஆண்டுக்கான வரையறுத்த இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(viii) 2014 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாவட்டச் செயலகம்
(ix) 2014 ஆம் ஆண்டுக்கான பதுளை மாவட்டச் செயலகம்
(x) 2014 ஆம் ஆண்டுக்கான மாத்தளை மாவட்டச் செயலகம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா             - 2 மனுக்கள்
(ii) கெளரவ (திருமதி) சந்திராணி பண்டார            - 1 மனு
(iii) கெளரவ சுசந்த புஞ்சிநிலமே                           - 6 மனுக்கள்
(iv) கெளரவ விஜித ஹேரத்                                  - 2 மனுக்கள்
(v) கௌரவ நிஹால் கலப்பத்தி                            - 4 மனுக்கள்
(vi) கௌரவ கே.கே. பியதாஸ                              - 1 மனு
(vii) கெளரவ பாலித தெவரப்பெரும                      - 7 மனுக்கள்
(viii) கெளரவ புத்திக பத்திறண                              - 3 மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

உலக சந்தையில் எண்ணெய் விலைகளில் பாரிய வீழ்ச்சியடைந்தும் இந்நாட்டு மக்களுக்கு நலன்கள் கிடைக்கப்பெறாமை


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம அவர்களுக்கு “குடாபுத்கமுவ ஸ்ரீ பியதஸ்ஸநாராம விகாரையின் செயற் சாதனைச் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் புத்தசாசன அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“அண்மைக் காலத்தில் காவல்துறையினரின் செயற்பாடு” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1834 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜனவரி 29ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom