இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஜனவரி 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-01-26

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ முஹம்மது ஷரீப் தௌபீக் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-

‘A’ : கௌரவ ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், பா.உ. அவர்களின் இராஜினமாக் கடிதம்
‘B’ : கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, பா.உ. அவர்களின் மரணம்

பின்வரும் சட்டமூலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்

‘C’ : உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள்  (திருத்தம்)
‘D’ : நுண்நிதியளிப்பு
‘E’ : தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்)


சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-

  • 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின்   அறிக்கையின் ஆறாவவது தொகுதியின் XXIII ஆம் பகுதியையும்;
  • 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின்   அறிக்கையின் முதலாவது தொகுதியின் VI ஆம் மற்றும் VII ஆம் பகுதிகளையும்; இரண்டாவது தொகுதியின் VIII, IX மற்றும் X ஆம் பகுதிகள் மற்றும் ஐந்தாவது தொகுதியின் II ஆம் பகுதி

இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை அலுவலகம்
(ii) 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான நிதி ஆணைக்குழு
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட செயலகம்
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்ட செயலகம்
(v) 2014 ஆம் ஆண்டுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகம்
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான கண்டி மாவட்ட செயலகம்
(vii) 2014 ஆம் ஆண்டுக்கான  மாத்தறை மாவட்ட செயலகம்
(viii) 2014 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட செயலகம்
(ix) 2014 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா மாவட்ட செயலகம்
(x) 2014 ஆம் ஆண்டுக்கான புத்தளம் மாவட்ட செயலகம்
(xi) 2014 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்ட செயலகம்
(xii) 2014 ஆம் ஆண்டுக்கான பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(xiii) 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவுச செய்யும் சட்டத்தின் 52 ஆம் பிரிவின் (1) உப பிரிவின் கீழ் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 திசெம்பர் 22 ஆம் திகதிய, 1946/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்

(xiv) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை
(xv) 2013 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சீ - நோர் நிறுவனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


(xvi) தேசிய அரசுப் பேரவையின் 1973 இலக்கம் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சினால் ஆக்கப்பட்டு, 2013 சனவரி மாதம் 15 ஆம் திகதிய, 1793/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க தேசிய விளையாட்டுச் சங்கத்தின் ஒழுங்கிதகள் கொண்ட 13 மற்றும் 17 ஆம்  பிரிவுகள் திருத்தப்பட்டு 2015 நவம்பர் மாதம் 09 ஆம்  திகதிய  1940/7 ஆம் இலக்க  அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ ஜோன் அமரதுங்க                  
(ii) கௌரவ வஜிர அபேவர்தன -  ஆறு மனுக்கள்
(iii) கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டா -  இரண்டு மனுக்கள்
(iv) கெளரவ கயந்த கருணாதிலக்க -  இரண்டு மனுக்கள்
(v) கெளரவ வசந்த அலுவிஹாரே -  நான்கு மனுக்கள்
(vi) கெளரவ அநுர திசாநாயக்க -  ஐந்து மனுக்கள்
(vii) கௌரவ லக்கி ஜயவர்தன -  இரண்டு மனுக்கள்
(viii) கௌரவ ஜே.சீ. அலவத்துவல -  இரண்டு மனுக்கள்
(ix) கௌரவ ஜயந்த சமரவீர -  இரண்டு மனுக்கள்
(x) கெளரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண -  மூன்று மனுக்கள்
(xi) கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா
(xii) கௌரவ எஸ்.எம். மரிக்கார் -  மூன்று மனுக்கள்
(xiii) கௌரவ ஹர்ஷன ராஜகருணா
(xiv) கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன -  மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தைத் திருத்துவதற்காக

“கடற்றொழில், நீ்ர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கெளரவ கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ புத்திக பத்திறண அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(i) றுஹுணு உதானய அமைப்பு (கூட்டிணைத்தல்)
(ii) “மாத்தறைப் பருவம்“ அமைப்பு (கூட்டிணைத்தல்)

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் கல்வி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.

(iii) கெளரவ விஜித பேருகொட அவர்களுக்கு “ஹேதன் கல்வி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கல்வி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

கெளரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(iv) ஹந்தகல வலகம்பா புராண கல்லென் ரஜமகா விஹாரஸ்த அபிவிருத்திச் சபை (கூட்டிணைத்தல்)
(v) மைத்திரிப்பால சேனாநாயக்க மன்ற (கூட்டிணைத்தல்)
(vi) ஸ்ரீ குணரதன சர்வதேச மன்ற (கூட்டிணைத்தல்)

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (iv) மற்றும் (vi) புத்தசாசன அமைச்சருக்கும் சட்டமூலம் (v) சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கும் ஆற்றுப்படுத்தப்பட்டன.

(vii) கெளரவ கனக ஹேரத் அவர்களுக்கு “மொனறாகல மாவட்ட கான்த்தா மஹா சங்கமய (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(viii) கெளரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களுக்கு “இலங்கைக் கணனிச் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(ix) கெளரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களுக்கு “தயா சரண அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“2015.12.19 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 157 ஆம் உறுப்புரையின் கீழ் பன்னிரண்டு தீர்மானங்கள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜனவரி 27ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom