இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 ஜனவரி 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-01-12

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்
‘B’ : “தண்டனைச் சட்டக்கோவை  (திருத்தம்)” மற்றும் “குற்றவியல்  நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)” சட்டமூலங்கள் தொடர்பான எதிர்கால செயற்பாடு
‘C’ : துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் பற்றி உறுப்பினர்களுக்கான கடிதம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) (136 ஆம் அத்தியாயமான) சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் 63 ஆம் பிரிவின் கீழ் தொழில் மற்றும் தொழிற் சங்க உறவுகள் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதி

(ii) 2015 ஒற்றோபர் 06 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் போலந்து குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பனவை தவிர்ப்பதற்கும் வரி செலுத்தாது தட்டிக்கழிப்பதனை த் தடுப்பதற்குமான  ஒப்பந்தம்

(iii) 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 (அ) ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 செத்தெம்பர் மாதம் 22 ஆம் திகதிய 1933/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 3 ஆம் உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்
(iv) 2015 செத்தெம்பர் 17 ஆம் திகதிய 1932/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(v) 2015 செத்தெம்பர் 22 ஆம் திகதிய 1933/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(vi) 2015 ஒற்றோபர்   01 ஆம் திகதிய 1934/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(vii) 2015 ஒற்றோபர்   09 ஆம் திகதிய 1935/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(viii) 2015 ஒற்றோபர்   28 ஆம் திகதிய 1938/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(ix) 2015 நவெம்பர்   20 ஆம் திகதிய 1941/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

எம்பிலிப்பிட்டிய மகா-எலையில் பொலிஸ் தாக்குதல் காரணமாக மரணமடைந்த இளைஞன் தொடர்பானது


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-

(i) உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தம்) - (262 ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது

(ii) நுண்நிதியளிப்பு - நுண்நிதியளிப்புத் தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற கம்பனிகளுக்கு உரிமமளிப்பதற்காகவும், அவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகவும் மற்றும் மேற்பார்வை செய்வதற்காகவும்; வரையறுக்கப்பட்ட சேமிப்பு வைப்புக்களை ஏற்றுக்கொள்கின்ற அரசாங்கஞ்சாரா ஒழுங்கமைப்புக்களை நுண்நிதியளிப்பு அரசாங்கஞ்சாரா ஒழுங்கமைப்புக்களாகப் பதிவுசெய்வதற்காகவும்; நுண்நிதியளிப்பு அரசாங்கஞ்சாரா ஒழுங்கமைப்புகளையும் மற்றும் நுண்கடன்வழங்கு அரசாங்கஞ்சாரா ஒழுங்கமைப்புக்களையும் ஒழுங்குபடுத்துவதற்காகவும் மேற்பார்வை செய்வதற்காகவும் நியமங்களைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கானது

(iii) தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) - இலங்கையிலுள்ள தேரவாத பிக்குமார்களின் நிகாயாக்கள் அல்லது மதப்பிரிவுகள் தொடர்பாக கதிகாவத்தை வகுத்தமைத்து பதிவு செய்வதற்கும்; பிக்கு ஒவ்வொருவருடனும் எந்த நிகாயா அல்லது மதப்பிரிவு தொடர்புபடுகின்றதோ அந்த நிகாயாவின் அல்லது மதப்பிரிவின் பதிவு செய்யப்பட்ட கதிகாவத் ஏற்பாடுகளுக்கு இணங்கியொழுக செயலாற்றுவதற்கு அத்தகைய பிக்குவுக்கு ஏற்பாடு செய்வதற்கும்; ஏதேனும் பதிவு செய்யப்பட்ட கதிகாவத்தின் ஏற்பாடுகளை மீறிச் செயலாற்றுகின்ற பிக்குமாருக்குத் தண்டனை விதிப்பதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான தீர்மானம்

விவாதிக்கப்பட்டதுடன் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1430 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜனவரி 26ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom