2015 டிசம்பர் 14ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-12-14 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-
‘A’ : பிரேரிக்கப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழு, அரசாங்க நிதி பற்றிய குழு மற்றும் பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகம் தொடர்பான ஆவணத்தை அனைத்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பகிர்ந்தளித்தல்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ பாலித ரங்கே பண்டார - இரண்டு மனுக்கள்
(ii) கெளரவ வசந்த அலுவிஹாரே - ஐந்து மனுக்கள்
(iii) கௌரவ நிஹால் கலப்பத்தி
(iv) கெளரவ ரீ. ரன்ஜித் த சொய்சா
(v) கெளரவ புத்திக பத்திறண - நான்கு மனுக்கள்
(vi) கெளரவ நாமல் ராஜபக்ஷ - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) – குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2016) ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பெருந்தோட்டத் துறையில் பிராந்திய கம்பனிகள் மற்றும் அதில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்குமிடையே கூட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1859 மணியளவில் பாராளுமன்றமானது 2015 டிசம்பர் 15ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2016]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






