2015 டிசம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-12-11 |
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கெளரவ ரீ. பீ. ஏக்கநாயக்க - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ ஜயந்த சமரவீர
(iii) கௌரவ ஹர்ஷன ராஜகருணா
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள், உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் தொடர்பாக சபையில் கூற்றினை முன்வைத்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) - (19 ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்கானது
(ii) குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்) - 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தினைத் திருத்துவதற்கானது
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ அலி ஸாஹிர் மௌலானா செயிட் அவர்களுக்கு பின்வரும் இரு கூட்டிணைத்தல் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(i) காசிமி மன்றம்
(ii) செய்யது சேஹு கோயா தங்கள் மௌலானா மன்றம்
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) முறையே சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் மற்றும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் ஆகியோருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
(iii) கெளரவ ஜயந்த சமரவீர அவர்களுக்கு “சத்மெத்சித்ஹவுல சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் புத்தசாசன அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(iv) கெளரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம அவர்களுக்கு “ஜயந்திபுர நலன்புரிச் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) – குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2016) ஒதுக்கப்பட்ட பதினேழாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
அதனையடுத்து, 1826 மணியளவில் பாராளுமன்றமானது 2015 டிசம்பர் 12ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2016]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






