இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 டிசம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-12-09

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ வசந்த அலுவிஹாரே - ஏழு மனுக்கள்
(ii) கெளரவ காமினி லொக்குகே                   
(iii) கௌரவ லக்கி ஜயவர்தன - ஆறு மனுக்கள்
(iv) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே - மூன்று மனுக்கள்
(v) கௌரவ அஜித் மான்னப்பெரும - எட்டு மனுக்கள்
(vi) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ  - மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i) பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க - வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் (2016) உள்ள சிக்கல்கள்

(ii) கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் - பாடசாலை சீருடைகளுக்கான உறுதிச்சீட்டு வழங்கல்


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ எட்வட் குணசேகர அவர்களுக்கு “ரன்ஜித் அலுவிஹாரே மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2016) – குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2016) ஒதுக்கப்பட்ட பதினைந்தாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“அநுராதபுர மாவட்டத்திலுள்ள சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான இழப்பீடு” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இஷாக் ரஹுமான் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2015 டிசம்பர் 10ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2016]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom