2015 டிசம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-12-08 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கெளரவ பி. ஹரிசன்
(ii) கௌரவ நிஹால் கலப்பத்தி - இரண்டு மனுக்கள்
(iii) கெளரவ விதுற விக்கிரமநாயக்க - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ புத்திக பத்திறண அவர்களுக்கு பின்வரும் கூட்டிணைத்தல் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(i) சிறுவர் புனர்வாழ்வு மையம்
(ii) சஹன சமுதாய அபிவிருத்தி மன்றம்
(iii) செரெட்செ காமா மன்றம் நம்பிக்கைப் பொறுப்பு
(iv) தென்னிலங்கை மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் பீடம்
(v) சமாதி சமூக அபிவிருத்தி மன்றம்
(vi) ஸ்ரீ பாலாபிவூர்தி வர்தன சமிதிய
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள்-
(i) மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்
(ii) மற்றும் (iii) சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி
(iv) மற்றும் (v) கல்வி
(vi) புத்தசாசன
அமைச்சர்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) – குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2016) ஒதுக்கப்பட்ட பதின்நான்காம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சிரேஷ்ட பிரஜைகளுக்கு நிலையான வைப்பு மீது கடன் பெறுவதற்கான வாய்ப்பு” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1815 மணியளவில் பாராளுமன்றமானது 2015 டிசம்பர் 09ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2016]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






