2015 டிசம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-12-07 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2014 ஆண்டுக்கான வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கெளரவ ஏ. எச். எம். பெளஸி - இரண்டு மனுக்கள்
(ii) கெளரவ அநுர திசாநாயக்க - நான்கு மனுக்கள்
(iii) கெளரவ பாலித தெவரப்பெரும - ஐந்து மனுக்கள்
(iv) கௌரவ ஹர்ஷன ராஜகருணா - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களுக்கு “மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) – குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2016) ஒதுக்கப்பட்ட பதிமூன்றாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலங்கை இரத்தினக்கல் கைத்தொழிலில் காணப்படும் நெருக்கடிகள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஏ.ஏ. விஜேதுங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1910 மணியளவில் பாராளுமன்றமானது 2015 டிசம்பர் 08ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2016]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






