2015 டிசம்பர் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-12-03 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.-
‘A’ : சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை மீளஸ்தாபித்தல்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டிற்கான மோட்டார் வாகனபோக்குவரத்துத் திணைக்கள செயலாற்றுகை அறிக்கை
(ii) 2016 வரைவு மதிப்பீடுகளில் வாசகங்களில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின் நிரல்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கெளரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன்
(ii) கெளரவ நிரோஷன் பெரேரா - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ சமிந்த விஜேசிறி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
தமிழ் அரசியற் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படல் தொடர்பாக கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கேட்கப்பட்ட வினாவுக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் பதிலளித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ சத்துர சந்தீப சேனாரத்ன அவர்களுக்கு “கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்களுக்கான இலங்கை அவை (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) – குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2016) ஒதுக்கப்பட்ட பத்தாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பிரேரணை
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொருத்தமான முறை” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2015 டிசம்பர் 04ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2016]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






