இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 டிசம்பர் 01ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-12-01

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 1982 ஏப்பிறல் 16 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் மலேசியா அரசாங்கத்திற்கும் இடையே முதலீட்டை ஊக்குவித்துப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை.

(ii) 1986 மார்ச்சு 13 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட முதலீடுகளின் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் மேம்பாடு பற்றிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்கள் சீன குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கை.

(iii) 1996 சனவரி 3 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் தாய்லாந்து அரசாங்கத்துக்கும் இடையே முதலீட்டை ஊக்குவித்துப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை.

(iv) 1996 மார்ச்சு 11 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் எகிப்து அராபியக் குடியரசின் அரசாங்கத்துக்கும் இடையே பரஸ்பர முதலீடுகளை மேம்படுத்திப் பாதுகாப்பது தொடர்பான உடன்படிக்கை.

(v) 1996 யூன் 10 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் இந்தோனேஷியக் குடியரசு அரசாங்கத்துக்கும் இடையே முதலீடுகளை ஊக்குவித்து பாதுகாப்பதற்கான உடன்படிக்கை.

(vi) 1997 சனவரி 22 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட முதலீடுகளின் மேம்பாட்டுக்கும் பாதுகாப்புக்குமென இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் இந்தியக் குடியரசு அரசாங்கத்துக்கும் இடையேயான உடன்படிக்கை.

(vii) 2000 சனவரி 5 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட முதலீடுகளின் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் மேம்பாடு பற்றிய இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்படிக்கை.

(viii) 2000 யூலை 25 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட முதலீடுகளின் பரஸ்பர மேம்பாட்டுக்கும் பாதுகாப்புக்குமாக இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கை.

(ix) 2009 ஒற்றோபர் 22 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு என்பவற்றிற்கான இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கம் மற்றும் வியட்நாம் சோசலிசக் குடியரசு அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையேயான ஒப்பந்தம்.

(x) 2009 நவெம்பர் 5 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் குவைத் நாட்டு அரசின் அரசாங்கத்துக்கும் இடையே முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் இருவயினொத்த முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்.

(xi) 2011 மார்ச் 28 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் செக் குடியரசு அரசாங்கத்துக்கும் இடையே முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் இருவயினொத்த பாதுகாப்பு ஒப்பந்தம்.

(xii) 2012 மே 22 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் கட்டார் நாட்டு அரசாங்கத்துக்குமிடையே முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் இருவயினொத்த பாதுகாப்பு சம்பந்தமான ஒப்பந்தம்.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

கெளரவ அசோக் அபேசிங்க – ஐந்து மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

ஓய்வூதிய சம்பளம் கணக்கிடும்போது ஆயுதப் படை உத்தியோகத்தர்களுக்கு தங்கள் சம்பளத்தின் 85% கிடைக்கப் பெறாமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

சிறு நெல் ஆலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கு கிராமியப் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் கௌரவ பி. ஹரிசன் அவர்கள் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(i) திருகோணமலை, பன்குளம், மொரவெவ தெற்கு சிறிகஜபா கல்லென ரஜமஹா விஹாரை அபிவிருத்தி மன்ற(கூட்டிணைத்தல்)

(ii) சுசந்த புஞ்சி நிலமே மன்ற(கூட்டிணைத்தல்)

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) முறையே பெளத்த சாசன அமைச்சர் மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.

(iii) கெளரவ நலின் பண்டாற ஜயமஹ அவர்களுக்கு “எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(iv) கெளரவ இஷாக் ரஹுமான் அவர்களுக்கு “இலங்கை பாதிஹ் நிறுவன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(v) கெளரவ எம்.எச்.எம். சல்மான் அவர்களுக்கு “தெல்தொட்ட மஹ்பலுல் உலமா அரபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (iv) மற்றும் (v) தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2016) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2016) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தோட்டப் பகுதியின் வளர்ச்சிக்கான தடைகளை அகற்றுதல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1900 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2015 டிசம்பர் 02ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2016]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom